/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இலக்கை எட்டுவதில் தாட்கோ அதிகாரிகள் திணறல்! பயனாளிகளுக்கு நிதி அளிப்பதில் அலட்சியம்
/
இலக்கை எட்டுவதில் தாட்கோ அதிகாரிகள் திணறல்! பயனாளிகளுக்கு நிதி அளிப்பதில் அலட்சியம்
இலக்கை எட்டுவதில் தாட்கோ அதிகாரிகள் திணறல்! பயனாளிகளுக்கு நிதி அளிப்பதில் அலட்சியம்
இலக்கை எட்டுவதில் தாட்கோ அதிகாரிகள் திணறல்! பயனாளிகளுக்கு நிதி அளிப்பதில் அலட்சியம்
UPDATED : செப் 26, 2024 06:33 AM
ADDED : செப் 26, 2024 12:01 AM

காஞ்சிபுரம்:மூன்று நிதி ஆண்டுகளாாக ஒதுக்கீட்டு இலக்கை எட்டுவதில், தாட்கோ அதிகாரிகள் திணறி வருகின்றனர். பயனாளிகளுக்கு, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் துறையினர் அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் என, அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்ட தாட்கோ அலுவலகம், காஞ்சிபுரம் எல்லப்பன் நகரில் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தின் வாயிலாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின்கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களின் வாயிலாக, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து பயடைந்து வருகின்றனர்.
குறிப்பாக, நிலம் வாங்குதல் மற்றும் நில மேம்பாடு செய்தல், கிணறு தோண்டுதல், இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பொருளாதார கடன், இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதி வழங்குதல் ஆகிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டங்களுக்கு, ஆண்டுதோறும் கணிசமான நிதியை, ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கீடு செய்து, தாட்கோ வாயிலாக செயல்படுத்தி வருகிறது. அதற்கு ஏற்ப, பயனாளிகளின் எண்ணிக்கை இலக்கு நிர்ணயம் செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2019 - 20ம் நிதி ஆண்டில், 7.69 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, 942 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு அரசு இலக்கு நிர்ணயம் செய்தது. இதில், 1,065 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இது, இலக்கு நிர்ணயம் செய்த பயனாளிகளை காட்டிலும், கூடுதலாக உள்ளது.
அதேபோல, ஒவ்வொரு ஆண்டும், கணிசமான நிதியை ஒதுக்கீடு செய்து, அரசு இலக்கு நிர்ணயம் செய்து வந்தது. இதில், 2020 - 21ம் நிதி ஆண்டு, 2022 - 23ம் நிதி ஆண்டு, 2023 - 24 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில், அரசு இலக்கு நிர்ணயம் செய்த இலக்கு எண்ணிக்கை எட்டவில்லை. மேலும், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்த நிதியும், முறையாக செலவிடப்படவில்லை என, தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, ஒவ்வொரு நிதி ஆண்டும், ஒரு கோடி ரூபாய் முதல், மூன்று கோடி ரூபாய் வரையில் நிதி செலவிடப்படவில்லை என, தமிழ்நாடு சட்டசபை பொது நிறுவனங்களின் ஆய்வு வாயிலாக தெரிய வந்துள்ளது.
இதனால், ஆதிதிராவிடர் நலத்துறையில் பயன்பெறுவோரின் எண்ணிக்கை சரியும் அபாயம் உள்ளது என, சமூக ஆர்வலர்கள் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தாட்கோ திட்ட பயனாளி ஒருவர் கூறியதாவது:
கார் ஓட்டுனர் உரிமம் இருந்தால், அவர்கள் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை பெற முன்பெல்லாம் விண்ணப்பிக்கலாம். இதற்கு, 35 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வந்தன.
தற்போது, தாட்கோ திட்டங்களுக்கு, என்ன விதமான மானியம் என, அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை. இதனால், பலர் விண்ணப்பிக்க தயக்கம் காட்டுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தாட்கோ அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தாட்கோ வாயிலாக செயல்படுத்தும் அனைத்து திட்டங்களும், ஆன்லைன் விண்ணப்பங்களின் மூலமாக பெறப்பட்டு வருகின்றன.
சரியான விண்ணப்பங்களை, பரிசீலனை செய்து உரிய பயனாளிகளுக்கு, நலத் திட்டம் மற்றும் கடனுதவி வழங்கி வருகிறோம்.
மேலும், 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு நலத் திட்ட உதவிகள் மற்றும் கடனுதவி வழங்கி வருகிறோம்.
பயனாளிகளுக்கு வழங்கும் மானியம், அரசிடம் இருந்து சற்று தாமதமாக கிடைக்கிறது. இருப்பினும், நிலுவையின்றி வழங்கி வருகிறோம்.
தாட்கோ திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

