நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் விற்பனை துறை துணை இயக்குனராக முகமது ரபிக் என்பவர் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு, அவர் ஓய்வு பெற்றார்.
அவருக்கு பதிலாக, ராணிப்பேட்டை மாவட்டம் வேளாண் விற்பனை துறை துணை இயக்குனர் சீனிராஜ் என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் விற்பனை துறை துணை இயக்குனராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
தற்போது, திருவள்ளூர் மாவட்டம், விதை சான்றளிப்பு துறை உதவி இயக்குனராக இருந்த, ஜீவராணி பதவி உயர்வில், காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் விற்பனை துறை துணை இயக்குனராக நியமிக்கப்பட்ட அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

