நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளராக வனிதா என்பவர் பதவி வகித்தார். அவருக்கு, துறை ரீதியாக சென்னைக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது.
அவருக்கு பதிலாக, தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகளின் இணையத்தின் கூடுதல் பதிவாளராக இருந்த சிவமலர் என்பவரை, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளராக, அத்துறை நிர்வாகம் நியமித்து உள்ளது.
அவர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

