/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தமிழ் மணக்கும் வார விழா ‛அ' வடிவில் விழிப்புணர்வு
/
தமிழ் மணக்கும் வார விழா ‛அ' வடிவில் விழிப்புணர்வு
ADDED : மே 01, 2025 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில், நேற்று பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, ‛தமிழ் மணக்கும் வார' விழா நடந்தது.
இந்த விழாவிற்கு, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார்.
அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய பயிற்சியாளர்கள் ‛அ' வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு, மண்டல இணைப்பதிவாளர் பரிசு வழங்கினார்.

