/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் மாணவருக்கு தமிழக அரசு விருது
/
உத்திரமேரூர் மாணவருக்கு தமிழக அரசு விருது
ADDED : மார் 27, 2025 12:51 AM

உத்திரமேரூர்:தமிழக வளர்ச்சி துறை, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் சார்பில், நடைமுறை வாழ்க்கையில் தூய தமிழ் பேசி வருபவர்களை, ஆண்டுதோறும் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2025ம் ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கும் விழா, சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று, 38 பேர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்த சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு படிக்கும் கதிர்பாரதி என்பவருக்கு, தூய தமிழ் பற்றாளர் விருது மற்றும் 20,000 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட்டது.