/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பல்கலை 'கிக் பாக்சிங்' சாம்பியன்ஷிப் தேசிய அளவில் சாதித்த தமிழகம்
/
பல்கலை 'கிக் பாக்சிங்' சாம்பியன்ஷிப் தேசிய அளவில் சாதித்த தமிழகம்
பல்கலை 'கிக் பாக்சிங்' சாம்பியன்ஷிப் தேசிய அளவில் சாதித்த தமிழகம்
பல்கலை 'கிக் பாக்சிங்' சாம்பியன்ஷிப் தேசிய அளவில் சாதித்த தமிழகம்
ADDED : மார் 11, 2024 04:57 AM

சென்னை : அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான 'கிக் பாக்சிங்' சாம்பியன்ஷிப் போட்டி, உத்தர பிரதேசம் மாநிலம் மீரட்டில் உள்ள சுவாமி விவேகானந்தா சுபாரதி பல்கலையில் நடந்தது.
போட்டிகள், கடந்த 5ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
தமிழகம் உட்பட நாடு முழுதும் உள்ள பல்வேறு பல்கலையில் இருந்து, வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இதில், தமிழகத்தில் இருந்து பங்கேற்ற மாணவ - மாணவியர், 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.
சவீதா பல்கலை வீராங்கனை வி.எஸ்.சுப்ரஜா, 'கிக் லைட்' 70 கிலோ பிரிவிலும், எம்.ஜி.ஆர்., பல்கலை வீரர் ஒய்.சையத் ஷாதிக் 'கிக் லைட்' 84 கிலோ பிரிவிலும், தலா ஒரு தங்கம் வென்று அசத்தினர்.
ஹிந்துஸ்தான் பல்கலையின் எஸ்.சுபாஷினி 'கிக் லைட்' 55 கிலோவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். வேல்ஸ் பல்கலையின் வீரர்களான வசீகரன் பாலு புள்ளிச்சண்டை 84 கிலோவிலும், கே.எஸ். சபரிகிருஷ்ணன் 'கிக் லைட்' 69 கிலோ பிரிவிலும் தலா ஒரு வெண்கலம் வென்று அசத்தினர்.
பதக்கங்கள் வென்ற மாணவர்களை, தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்கத்தினர் பாராட்டினர்.
அகில இந்திய பல்கலை கிக் பாக்சிங் போட்டியில், பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனையர்.

