/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு விஷூ கனி தரிசனம்
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு விஷூ கனி தரிசனம்
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு விஷூ கனி தரிசனம்
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு விஷூ கனி தரிசனம்
ADDED : ஏப் 15, 2025 12:53 AM

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டை முருகன் கோவிலில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, விஷூ கனி தரிசனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதிகாலையில், மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகத்திற்கு பின், கனி அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, கோவில் நுழைவாயில், அர்த்த மண்டபம், மஹா மண்டபம், கருவறை ஆகியவற்றில், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, அண்ணாச்சி, சாத்துக்குடி, மா, பலா, வாழை ஆகிய பழங்கள் மற்றும் தாமரை, ரோஜா, சாமந்தி, மல்லிகை, பசும்புற்கள், வாழைத்தார் உள்ளிட்ட தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
உற்சவர் முருகப் பெருமானுக்கு, பழமாலை முத்தங்கி சேவையில் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், நீர் மோர் வழங்கப்பட்டன. கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.