/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
/
தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
ADDED : அக் 17, 2025 10:13 PM
காஞ்சிபுரம்: தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கு, 7,500 ரூபாய் மாத உதவித்தொகை, 500 ரூபாய் மருத்துவ படி என, 8,000 ரூபாய் அரசு வழங்குகிறது.
தவிர, அவரது குடும்பத்தினருக்கு, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, 100ல் இருந்து, 150 நபர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர், 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய், 1.20 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
தமிழுக்கு ஆற்றிய பணி சான்று, ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன், tamilvalarchithurai.org/agavai/ என்ற வலைதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.