தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/முடங்கிய வழித்தடங்களை வாரியம் துாசி தட்டுது! தடையின்றி மின்சாரம் வழங்க முயற்சி

முடங்கிய வழித்தடங்களை வாரியம் துாசி தட்டுது! தடையின்றி மின்சாரம் வழங்க முயற்சி

முடங்கிய வழித்தடங்களை வாரியம் துாசி தட்டுது! தடையின்றி மின்சாரம் வழங்க முயற்சி


UPDATED : ஆக 27, 2026 09:03 PM

ADDED : ஆக 27, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2026 09:03 PM ADDED : ஆக 27, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:அவசர நேரங்களில், மாற்று வழித்தடத்தில் வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் 25 கிராமங்களுக்கு தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில், பயன்பாடில்லாத மின் வழித்தடங்களை பயன்படுத்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய மின் பகிர்மான கோட்டங்கள் உள்ளன. இதில், 25க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் 11 மற்றும் 33 கிலோ வோல்ட் திறன் கொண்டவை.

இந்த 25 துணை மின் நிலையங்களுக்கு, சுங்குவார்சத்திரம் மற்றும் ஆரியபெரும்பாக்கம் ஆகிய இரண்டு இடங்களில் இயங்கும் 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.

ஒரு துணை மின் நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், அடுத்த துணை மின் நிலையத்தில் இருந்து, மாற்று மின் வழித்தடம் மூலம் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுபோன்ற கட்டமைப்புகளை, அனைத்து துணை மின் நிலையங்களிலும், மின் வாரிய அதிகாரிகள் கூடுதல் மின் வழித்தடம் மற்றும் மாற்று மின் வழித்தடத்தை ஏற்படுத்தி உள்ளனர். வாரிய அதிகாரிகளின் செயலால், பெரும்பாலான துணை மின் நிலையங்களில், மின் தடை ஏற்படாமல் உள்ளது.

இதில், வாலாஜாபாத், ஓரிக்கை ஆகிய துணை மின் நிலைங்களுக்கு, மாற்று மின் வழித்தடம் இல்லை. இதனால், மின் தடை ஏற்பட்டால், பல மணி நேரம் மின்சாரம் இன்றி கிராமம் மற்றும் நகர வணிக இணைப்பு மற்றும் குடியிருப்பு மக்கள் அவதிப்பட வேண்டி உள்ளது.

இதுபோன்ற பிரச்னைகளை சமாளிக்க, மாற்று மின் வழித்தடத்திற்கு மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில், மின் தடை ஏற்பட்டால் மாற்று மின் வழித்தடம் வழியாக மின் சப்ளை எடுத்து செல்ல, புதிய மின் வழித்தடத்திற்கு பதிலாக, ஏற்கனவே பயன்பாட்டில் இல்லாத மின் வழித்தடத்தை வாரிய அதிகாரிகள் தேர்வு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளனர்.

இந்த மாற்று மின் வழித்தடத்தின் மூலமாக, வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள 25 கிராமங்கள் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என, வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட பொறியாளர் ஒருவர் கூறியதாவது:

வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் மின் தடை ஏற்பட்டால், மாற்று வழித்தடத்தில் மின்சாரம் வழங்குவதற்கு, போதிய மாற்று மின் வழித்தடம் இல்லை.

புதிய மின் வழித்தடம் போட வேண்டும் என்றால், 12 கி.மீ., துாரத்திற்கு நிலம் எடுப்பு, மின் கம்பங்கள் என, மூன்று கோடி ரூபாய் வரையில் செலவிட வேண்டி உள்ளது.

மின்வாரியம் நிதி சுமையில் உள்ள நிலையில், ஒரு துணை மின் நிலையத்திற்கு, மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு கிடைக்காது.

இதை கருத்தில் கொண்டு, விளாகம் துணை மின் நிலையம் எனும், சங்கராபுரத்தில் இருந்து, புளியம்பாக்கம், வாலாஜாபாத் துணை மின் நிலையத்திற்கு, பயன்படாத மின் வழித்தடத்தை மாற்று வழித்தடமாக பயன்படுத்த, 35 லட்சம் ரூபாய்க்கு புதிய திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம்.

துறை ஒப்புதல் கிடைத்த பின், புதிய மின் வழித்தடம் அமைத்து, தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் வழி வகை செய்வோம். இதன் மூலமாக, வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள 25 கிராமங்கள் பயன்பெறும். மேலும், குறைந்தழுத்த மின் பிரச்னை இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us