/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புனரமைக்கப்பட்ட அண்ணா பட்டு விற்பனை நிலையத்திற்கு ரூ.10 கோடி இலக்கு

ADDED : நவ 16, 2025 02:14 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் சாலையில், அண்ணா பட்டு கூட்டுறவு கைத்தறி சங்கத்தின், புனரமைக்கப்பட்ட விற்பனை வளாகத்திற்கு, விற்பனை இலக்காக 10 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பன் சாலையில், அண்ணா பட்டு கூட்டுறவு கைத்தறி சங்கத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இங்குள்ள பழைய விற்பனை நிலையத்தை சீரமைக்க நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 3 கோடி ரூபாய் மதிப்பில், சீரமைக்கப்பட்ட இந்த விற்பனை நிலையத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, கைத்தறி துறை அமைச்சர் காந்தி, இந்த விற்பனை நிலையத்தை நேற்று பார்வையிட்டு, அங்கு விற்பனைக்கு வைத்திருந்த கைத்தறி பட்டு சேலைகள் பற்றி கேட்டறிந்தார்.
விற்பனை நிலையம், 6597 சதுரடி பரப்பளவில் புனரமைக்கப்பட்ட இந்த விற்பனை நிலையத்திற்கு, விற்பனை இலக்காக, 10 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது, தி.மு.க., - -எம்.எல்.ஏ.,க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.