/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழில்நுட்ப கோளாறு லண்டன் விமானம் தாமதம்
/
தொழில்நுட்ப கோளாறு லண்டன் விமானம் தாமதம்
ADDED : நவ 25, 2025 04:12 AM
சென்னை: தொழில்நுட்ப கோளாறால், லண்டன் விமானம் புறப்படுவதில் மூன்று மணி நேரம் தாமதமானது.
சென்னையில் இருந்து லண்டன் செல்லும் 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' விமானம், நேற்று காலை 7:30 மணிக்கு புறப்பட இருந்தது. இதில், பயணம் செய்ய 160 பேர் சோதனைகளை முடித்து காத்திருந்தனர்.
இந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்த விமானிகள், விமானத்தை இயக்குவது ஆபத்தானது என்பதை உணர்ந்து, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். பணிகள் முடிய மூன்று மணி நேரமானது. இதையடுத்து, 10:30 மணிக்கு விமானம், சென்னையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டது.

