/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பணத்தகராறில் கடத்தப்பட்ட வாலிபர் தி.நகரில் மீட்பு
/
பணத்தகராறில் கடத்தப்பட்ட வாலிபர் தி.நகரில் மீட்பு
ADDED : ஜன 09, 2024 12:20 AM
பாண்டிபஜார் : தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான், 32. இவர், மண்ணடியைச் சேர்ந்த அய்யூப் என்பவரின் பணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
பணப்பரிமாற்றம் செய்ய ஆய்யூப் அளித்த 13 லட்சம் ரூபாயை, அப்துல் ரகுமான் 'ஆட்டை' போட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ஆய்யூப், நண்பர்களான அபுதாகீர், வீரா ஆகியோருடன், கடந்த 6ம் தேதி, அப்துல் ரகுமான் மற்றும் அவரது உறவினர் ஷேகபீர் ஹம்ஷா ஆகியோரை காரில் கடத்தி, தி.நகரில் உள்ள தங்கும் விடுதியில் அடைத்து வைத்தனர்.
பின், அவர்களை கைகளால் தாக்கி பணத்தை திருப்பி கேட்டு மிரட்டி உள்ளனர். இது குறித்து அப்துல் ரகுமானின் தந்தை அலாவுதீன், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, அப்துல் ரகுமான் மற்றும் அவரது உறவினரை மீட்ட போலீசார், கே.கே.நகர், குறிஞ்சி நகரைச் சேர்ந்த சையது அபுதாகீர், 39, என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.