/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பேருந்து மோதி வாலிபர் உயிரிழப்பு
/
பேருந்து மோதி வாலிபர் உயிரிழப்பு
ADDED : பிப் 06, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : திருவண்ணாமலை மாவட்டம், ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரமுத்து மகன் ராஜேஷ், 31, திருமணமாகி இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். தனியார் டிரான்ஸ்போர்ட் ஒன்றில் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்து உள்ளார்.
இவர், காஞ்சிபுரம் அடுத்த, சிட்டியம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில், நேற்று முன்தினம், சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதியது. அதில், படுகாயம் அடைந்த ராஜேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து, அவரது அண்ணன் ராஜ்குமார், காஞ்சி தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார்.