/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுமி பாலியல் வழக்கு வாலிபருக்கு 12 ஆண்டு சிறை
/
சிறுமி பாலியல் வழக்கு வாலிபருக்கு 12 ஆண்டு சிறை
ADDED : ஆக 13, 2025 01:52 AM

திருவள்ளூர்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 12 ஆண்டு சிறை தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து, திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் வி.கே.என். கண்டிகை இருளர் காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 24; இவர், 2021ல், அதே பகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, திருத்தணி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர்.
இந்த வழக்கு, திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி உமா மகேஸ்வரி, வெங்கடேசனுக்கு, 12 ஆண்டு சிறை தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.