/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.57 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட கோவில் குளம் மூன்றே மாதங்களில் பாசி படர்ந்த அவலம்
/
ரூ.57 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட கோவில் குளம் மூன்றே மாதங்களில் பாசி படர்ந்த அவலம்
ரூ.57 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட கோவில் குளம் மூன்றே மாதங்களில் பாசி படர்ந்த அவலம்
ரூ.57 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட கோவில் குளம் மூன்றே மாதங்களில் பாசி படர்ந்த அவலம்
ADDED : அக் 27, 2025 11:41 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மூன்று மாதங்களுக்கு முன், 57.20 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட அழகிய சிங்கபெருமாள் கோவில் குளத்தில், படர்ந்துள்ள பாசியை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அழகிய சிங்கபெருமாள் கோவிலுக்கு வெளியே உள்ள தெப்பகுளம், 15 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டு, தெப்போத்சவம் நடந்து வந்தது.
பின், முறையான பராமரிப்பு இல்லாததால், செடிகள் வளர்ந்து குளம் சீரழிந்ததால் தெப்போத்சவம் நடத்தவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையின்போது, குளத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.
இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தவறி குளத்திற்குள் விழாமல் இருக்க தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும் இக்குளத்தை துார்வாரி சுற்றுச்சுவர் அமைத்து சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, இக்கோவில் குளத்தை சீரமைக்க தமிழக அரசு, 57.20 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. கோவில் சீரமைப்பு பணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கியது.
இதையடுத்து, குளம் முழுதும் துார்வாரப் பட்டது. படிகள் சீரமைக்கப்பட்டு, சுற்றுச்சுவரில் இரும்பு கிரில் கேட், மின் விளக்குகள் அமைக்கப் பட்டு, மூன்று மாதங்களுக்கு முன் குளம் சீரமைப்பு பணி நிறைவு பெற்றது.
சீரமைப்பு பணி முடிந்து, மூன்று மாதங்களே ஆன நிலையில், தற்போது குளத்தில் தேங்கியுள்ள மழைநீர் பாசி படர்ந்து பச்சை நிறமாக மாறியுள்ளதால், பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே, லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து சீரமைக்கப்பட்ட அழகிய சிங்கபெருமாள் கோவில் குளத்து நீரில் படர்ந்துள்ள பாசியை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

