/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலவாக்கம் அரசு ஐ.டி.ஐ.,க்கு தற்காலிக கட்டடம் தயார்
/
சாலவாக்கம் அரசு ஐ.டி.ஐ.,க்கு தற்காலிக கட்டடம் தயார்
சாலவாக்கம் அரசு ஐ.டி.ஐ.,க்கு தற்காலிக கட்டடம் தயார்
சாலவாக்கம் அரசு ஐ.டி.ஐ.,க்கு தற்காலிக கட்டடம் தயார்
ADDED : ஜூலை 02, 2025 11:23 PM

உத்திரமேரூர்:சாலவாக்கத்தில் அரசு ஐ.டி.ஐ., செயல்பட தற்காலிக கட்டடம் தயார் நிலையில் உள்ளது.
கடந்த 2025 பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி, சாலவாக்கத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு கட்டடம் கட்டப்படும் வரை, வாடகை கட்டடத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக, சாலவாக்கம் - செங்கல்பட்டு செல்லும் சாலை பகுதியில் உள்ள தனியார் கட்டடம் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
ஆக.1ல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது, என, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜா தெரிவித்தார்.