/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் தேர் திருவிழாவுக்கு 5 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள்; பாதுகாப்புக்கு 1,000 போலீசார்

ADDED : மே 15, 2025 08:35 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாக்களான கருடசேவை உற்சவம் முடிந்த நிலையில், நாளை தேர் உற்சவம் நடைபெற உள்ளது.
இதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம், போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், ஊர்க்காவல் படை, போலீசார் என, 1,000 பேர், எஸ்.பி.,சண்முகம் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். காவல்துறை உதவி மையங்கள், குடிநீர் தொட்டிகள், தற்காலிக கழிப்பறை, கண்காணிப்பு கேமராக்கள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 6:00 மணிக்கு தேர் புறப்பட்டு வீதியுலா சென்று மீண்டும், மாலை 5:00 மணிக்கு நிலைக்கு தேர் வந்தடையும். அப்போது, பக்தர்கள் தேர் மீது ஏறி சுவாமி தரிசனம் செய்யலாம் எனவும், அதற்கு முன்பாக தேர் மீது ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை என, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, காஞ்சிபுரம் நகரில் தேர் திருவிழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் நகரில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம், காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை செயல்படும் என, காவல் துறை தெரிவித்துள்ளது.