/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புத்தகரம் கோவில் தேர் வெள்ளோட்டம் இரு தரப்பு கருத்து வேறுபாட்டால் பதற்றம்
/
புத்தகரம் கோவில் தேர் வெள்ளோட்டம் இரு தரப்பு கருத்து வேறுபாட்டால் பதற்றம்
புத்தகரம் கோவில் தேர் வெள்ளோட்டம் இரு தரப்பு கருத்து வேறுபாட்டால் பதற்றம்
புத்தகரம் கோவில் தேர் வெள்ளோட்டம் இரு தரப்பு கருத்து வேறுபாட்டால் பதற்றம்
ADDED : செப் 03, 2025 10:34 PM
வாலாஜாபாத்:புத்தகரம், முத்து கொளக்கியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெறுவதில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியம், புத்தகரம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் முத்து கொளக்கியம்மன் கோவில் உள்ளது. 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், ஆடி மாதம் விழாவில் அம்மன் தேரில் அமர்ந்து வீதியுலா நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
இந்நிலையில், தேர் பழுது காரணமாக, 40 ஆண்டுகளுக்கு மேலாக தேரோட்டம் இல்லாமல் விழா நடைபெறுகிறது. இதனால், இக்கோவிலுக்கு புதிய தேர் ஏற்படுத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, முத்து கொளக்கியம்மன் கோவிலுக்கு புதியதாக தேர் செய்ய பொது நல நிதியில் இருந்து, 28.40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணி, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் எம்.பி., செல்வம் ஆகியோர் முன்னிலையில் கடந்த ஆண்டு ஜூலையில் துவங்கியது.
தற்போது பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், நாளை, தேர் வெள்ளோட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர், வெள்ளோட்டத்தின் போது தங்கள் பகுதியிலும் தேர் உலா வர வேண்டும் என வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
இதற்கு மற்றொரு தரப்பினர் மறுப்பு தெரிவித்து, 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பழைய நடைமுறையின்படி தேர் வெள்ளோட்டம் நடத்த வேண்டும் என, கூறி வருவதாக தெரிகிறது.
இதுகுறித்து, இரு தரப்பினரும், கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஹிந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட அதிகாரிகளிடத்தில் தங்கள் தரப்பு கோரிக்கைகளை தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர்.
நாளை, தேர் வெள்ளோட்டத்திற்கு திட்டமிட்டுள்ள நிலையில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.