/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடோனில் பயங்கர தீ விபத்து குன்றத்துார் அருகே பரபரப்பு
/
குடோனில் பயங்கர தீ விபத்து குன்றத்துார் அருகே பரபரப்பு
குடோனில் பயங்கர தீ விபத்து குன்றத்துார் அருகே பரபரப்பு
குடோனில் பயங்கர தீ விபத்து குன்றத்துார் அருகே பரபரப்பு
ADDED : ஜன 11, 2024 10:20 PM

குன்றத்துார்:குன்றத்துார் அருகே இரண்டாம் கட்டளை ஊராட்சி, ராகவேந்திரா நகரில், 'மதன் டிரேடர்ஸ்' என்ற பெயரில் திறந்தவெளியில் குடோன் இயங்கி வருகிறது. இங்கு, தொழிற்சாலைகளில் இருந்து இரும்பு கழிவுகள், காஸ் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
நேற்று இரவு 7:00 மணியளவில் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்ட பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பூந்தமல்லி, மதுரவாயல், தாம்பரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
தீ விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால், குடோனை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர். பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் மின் தடை செய்யப்பட்டது.
குடோனை சுற்றியுள்ள வீடுகளில் வசிப்போர் வெளியேற்றப்பட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணி இரவு 9:00 மணிக்கும் மேல் தொடர்ந்தது.