/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கணிசமான வருவாய்க்கு தாய்லாந்து ரக மாம்பழம்
/
கணிசமான வருவாய்க்கு தாய்லாந்து ரக மாம்பழம்
ADDED : ஆக 06, 2025 02:08 AM

சோ க் ஆனன் என்ற, தாய்லாந்து ரக மாம்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த, விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும் பலவித பழ மரங்களை, நம்மூரில் சாகுபடி செய்யலாம். நம்மூரின் செம்மண், வண்டல் கலந்த களிமண் உள்ளிட்ட பல் வேறு மண்ணில், இவை நன்றாக வளர் கின்றன.
அந்த வரிசையில், சோக் ஆனன் என்ற தாய்லாந்து ரக மாம்பழம் சாகுபடி செய்துள்ளேன். இந்த மா மரங்களை, விளை நிலங்கள் மற்றும் மாடி தோட்டங்களில் சாகுபடி செய்யலாம்.
பிற ரக மாம்பழங்கள் சீசன் முடிந்த பின், ஜூன் மாதம் சோக் ஆனன் ரக மாங்காய்கள் காய்க்க துவங்கும். மாம் பழம் சீசன் இல்லாத ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில், இந்த ரக மாம்பழம் விளைச்சல் கிடைக்கும். சீசன் இல்லாத நேரங்களில் கிடைக்கும் இந்த ரக மாம் பழங்களை, நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம்.
குறிப்பாக, மாடி தோட்டம், வீடுகளில் சாகுபடி செய்யும் பழ மர விவசாயிகளை காட்டிலும், விளை நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்க வழி வகுக்கும்.
சீசன் இல்லாத நேரங்களில், மாம்பழம் மகசூல் முடிந்தும், அடுத்த ஆறு மாதங்கள் கழித்து, மற்றொரு மகசூலுக்கு தயாராகிவிடும். ஒரு ஆண்டிற்கு இரு முறை மாம்பழம் விளைச்சல் கொடுப்பதால், கணிசமான வருவாய் ஈட்டுவதற்கு வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
- -பி.கிருஷ்ணன், 94441 20032.