/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தம்மனுார் - இளையனார்வேலுார் குறுகிய சாலையால் விபத்து அபாயம்
/
தம்மனுார் - இளையனார்வேலுார் குறுகிய சாலையால் விபத்து அபாயம்
தம்மனுார் - இளையனார்வேலுார் குறுகிய சாலையால் விபத்து அபாயம்
தம்மனுார் - இளையனார்வேலுார் குறுகிய சாலையால் விபத்து அபாயம்
ADDED : நவ 03, 2025 11:02 PM
வாலாஜாபாத்:  தம்மனுாரில் - இளையனார்வேலுார் வரையிலான குறுகிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வாலாஜாபாதில் இருந்து அவளூர் கூட்டுச்சாலை வழியாக, இளையனார்வேலுார் செல்லும் சாலை உள்ளது.
கண்ணடியன்குடிசை, கணபதிபுரம், தம்மனுார், கம்பராஜபுரம், வல்லிமேடு, காவாந்தண்டலம் உள்ளிட்ட கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் தம்மனுார் துவங்கி இளையனார்வேலுார் வரையிலான சாலை மிகவும் குறுகியதாக உள்ளது.
இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
எனவே, தம்மனுாரில் இருந்து இளையனார்வேலுார் வரையிலான சாலையை அகலப் படுத்தி தர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.