/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தென்சென்னையை குறிவைக்கும் பா.ஜ., வெற்றிவாய்ப்பு கிட்டும் என நம்பிக்கை உள்ளூர் தேர்தல் களம்
/
தென்சென்னையை குறிவைக்கும் பா.ஜ., வெற்றிவாய்ப்பு கிட்டும் என நம்பிக்கை உள்ளூர் தேர்தல் களம்
தென்சென்னையை குறிவைக்கும் பா.ஜ., வெற்றிவாய்ப்பு கிட்டும் என நம்பிக்கை உள்ளூர் தேர்தல் களம்
தென்சென்னையை குறிவைக்கும் பா.ஜ., வெற்றிவாய்ப்பு கிட்டும் என நம்பிக்கை உள்ளூர் தேர்தல் களம்
ADDED : மார் 20, 2024 10:05 PM
தென்சென்னை லோக்சபா தொகுதியில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லுார் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளும், தி.மு.க., கூட்டணி வசம் உள்ளன.
கடந்தாண்டு பெய்த 'மிக்ஜாம்' புயல் மழை, சென்னையை புரட்டி போட்டது.
ஒத்துழைப்பு
குறிப்பாக, தென் சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட வேளச்சேரி, சோழிங்கநல்லுார், தி.நகர், விருகம்பாக்கம் பகுதிகள், வெள்ளத்தில் மிதந்தன. அந்நேரத்தில், இப்பகுதி மக்களை ஆளுங்கட்சியினர் கண்டுகொள்ளவில்லை என, விரக்தி நிலவியது.
தவிர, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி தொகுதியில் ஆன்மிக சிந்தனையாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். அமைச்சர் உதயநிதியின் சனாதன ஒழிப்பு, அமைச்சர் ராஜாவின் ஹிந்து எதிர்ப்பு பேச்சுக்கள், தி.மு.க.வின் மீது எதிர்ப்பை சம்பாதித்துள்ளன.
இதனால், இத்தொகுதி யில் மீண்டும் போட்டியிடலாமா, வேண்டாமா என, எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் யோசித்ததாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், அ.தி.மு.க.,வில் முன்னாள் எம்.பி., ஜெயவர்தன், முன்னாள் எம்.எல்.ஏ., கந்தன் மகன் சதீஷ், முன்னாள் எம்.பி., ராஜேந்திரன் ஆதரவாளரான கோவிலம்பாக்கம் மணிமாறன் உள்ளிட்டோர் 'சீட்' கேட்டு போராடினர்.
இந்த மூன்று தரப்பினருக்கும் மேலோட்டமாக ஒன்றாக இருப்பது போல இருந்தாலும், உள்ளுக்குள் கட்சி வளர்ச்சி பகை இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதனால், தேர்தலில் ஒத்துழைப்பு இல்லாமல் போகலாம் என்ற சூழல் நிலவுகிறது.
அறுவடை
இதுகுறித்து, பா.ஜ., வினர் கூறியதாவது:
இரண்டு திராவிடக் கட்சிகளின் மேற்கண்ட பாதகங்களை கருத்தில் கொண்டு, தென்சென்னையில் பா.ஜ., களம் காணவுள்ளது. இத்தொகுதியில் பிராமணர், வன்னியர் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். அதுபோக மற்ற சமூகத்தினரும் உள்ளனர்.
தற்போது, பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில், தென் சென்னையில் மிகவும் பிரபலமான ஒருவரை நிற்கவைத்து, அச்சமுக ஓட்டுகளை அறுவடை செய்ய வியூகம் வகுத்து உள்ளது.
அதற்கேற்ற வகையில், தொகுதிக்கு பிரதமர் மோடி வந்து சென்றது கூடுதல் பலத்தை தந்துள்ளது. இந்த தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட தொழிலதிபர் ஐசரி கணேஷ், குஷ்பு, நாராயண் திருப்பதி, எஸ்.ஜி.சூர்யா, கரு.நாகராஜன், டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் பட்டியலில் உள்ளனர். இந்த பட்டியலில், கட்சியிலேயே இல்லாத நடிகர் அர்ஜுன் பெயரும் அடிபட்டது.
படித்தவர்கள் அதிகம் உள்ள தென்சென்னை தொகுதியில், பா.ஜ.,வின் தேர்தல் பிரசாரம் வித்தியாசமாகவும், டிஜிட்டல் முறையிலும் மக்களின் ஓட்டுகளை பெற வியூகம் வகுத்துள்ளனர். இம்முறை, மும்முனை போட்டியாக விளங்கும் இத்தொகுதியை, பா.ஜ., கைப்பற்றும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- -நமது நிருபர்- -

