/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இளைஞரை வெட்டி பைக் பறித்த சிறுவர்கள்
/
இளைஞரை வெட்டி பைக் பறித்த சிறுவர்கள்
ADDED : பிப் 16, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி, மோச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மாதவன், 30; வெல்டர். இவர், நேற்று முன்தினம் இரவு, 'ஹோண்டா யூனிக்கான்' பைக்கில் செரப்பணஞ்சேரி - --மோச்சேரி சாலையில் சென்றார்.
அப்போது, மாதவனை வழிமறித்த மர்ம நபர்கள் மூவர், கத்தியால் வெட்டிவிட்டு, பைக்கை பறித்துச் சென்றனர். காயமடைந்த மாதவன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்த புகாரை விசாரித்த மணிமங்கலம் போலீசார், நாவலுார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த, 17 வயது சிறுவர்கள் மூவரை பிடித்து விசாரிக்கின்றனர்.