/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி சுவரில் வளர்ந்துள்ள அரச மர செடிகளால் கட்டடம் வலுவிழக்கும் அபாயம்

ADDED : நவ 13, 2025 11:55 PM

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், பள்ளி சுவரில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகளால், கட்டடம் வலுவிழக்கும் அபாயம் உள்ளது.
உத்திரமேரூரில், காஞ்சிபுரம் செல்லும் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்குள்ள, பள்ளி கட்டட சுவரில் அரச மரச்செடிகள் வளர்ந்து வருகின்றன. மரத்தின் வேர்கள் நாளடைவில் வளர்ந்து, கட்டடம் வலுவிழந்து அதன் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது:
உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சமீப நாட்களாக கட்டடங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளன. கட்டடங்களை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படாமல் உள்ளன.
இதிலிருந்து பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்கள் வகுப்பறைக்குள் வருகின்றன. மேலும், பள்ளி சுவரில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகளை அகற்ற, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.