/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குண்டும் குழியுமான பேரீஞ்சம்பாக்கம் சாலை
/
குண்டும் குழியுமான பேரீஞ்சம்பாக்கம் சாலை
ADDED : ஜன 16, 2025 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பேரீஞ்சம்பாக்கம் கிராமத்தில் இருந்து, வளத்தாஞ்சேரி வழியாக ஸ்ரீபெரும்புதுார் செல்லும் சாலையில், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில், பேரீஞ்சம்பாக்கம் அருகே, சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செந்தில்குமார்,
பேரீஞ்சம்பாக்கம்.

