/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துார்ந்துள்ள வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
துார்ந்துள்ள வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
துார்ந்துள்ள வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
துார்ந்துள்ள வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : நவ 27, 2024 11:27 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வேலுார் சாலை, சிறுகாவேரிபாக்கம் பி.டி.ஓ., அலுவலகம் எதிரே, அப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் செல்லும் வடிகால்வாய் உள்ளது.
இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் புதர்போல வளர்ந்துள்ளதோடு, பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளதால், கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், கழிவுநீர் ஒரே இடத்தில் தேங்கி, கொசு தொல்லை அதிகரித்துள்ளதாக, பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.