/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கவுன்சிலர்கள், தி.மு.க., வட்ட செயலர்கள் இடையே காஞ்சிபுரம் மாநகராட்சியில் நீடிக்கும் பனிப்போர்
/
கவுன்சிலர்கள், தி.மு.க., வட்ட செயலர்கள் இடையே காஞ்சிபுரம் மாநகராட்சியில் நீடிக்கும் பனிப்போர்
கவுன்சிலர்கள், தி.மு.க., வட்ட செயலர்கள் இடையே காஞ்சிபுரம் மாநகராட்சியில் நீடிக்கும் பனிப்போர்
கவுன்சிலர்கள், தி.மு.க., வட்ட செயலர்கள் இடையே காஞ்சிபுரம் மாநகராட்சியில் நீடிக்கும் பனிப்போர்
ADDED : ஆக 13, 2025 10:47 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், சுயேட்சை - எதிர்கட்சி கவுன்சிலர்களுக்கும், தி.மு.க., வின் வட்ட செயலர்களுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. இதில், 33 வார்டுகளில் தி.மு.க., கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மீதமுள்ள 18 வார்டு களில், அ.தி.மு.க., - சுயேட்சை - காங்., - பாஜ., - பா.ம.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பதவி வகிக்கின்றனர்.
இதில், தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ள வார்டுகளில், கவுன்சிலர்களுக்கும், திமுக வட்ட செயலர்களுக்கும் இடையே வெளிப்படையான சலசலப்பு இருப்பதில்லை.
ஆனால், தி.மு.க., இல்லாத பிற கட்சியினர் கவுன்சிலர்களாக உள்ள 18 வார்டுகளில், தி.மு.க.,வின் வட்ட செயலர்களுக்கும், அந்த வார்டு கவுன்சிலர்களுக்கும் இடையே பனிப்போர் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
தி.மு.க., வட்ட செயலர்கள், தங்களது வார்டுகளில் ஆளுங்கட்சி என்ற ரீதியில், அரசு திட்டங்களில் முன்னின்று பணியாற்றுவது வாடிக்கையாக உள்ளது.
உதாரணமாக, தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தில், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே வினியோகம் செய்வதில் வட்ட செயலர்கள் தாங்களே சென்று அரிசி வழங்குவது போல போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.
ஆனால், அந்த வார்டு எதிர்கட்சி கவுன்சிலர்களுக்கு, அரசு திட்ட செயல்பாடுகளுக்கு எந்தவித அழைப்பும் இருப்பதில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.
வார்டு கவுன்சிலர்களை காட்டிலும், அந்த வார்டின் ஆளுங்கட்சி வட்ட செயலர்களுக்கே, அதிகாரிகளும் முன்னுரிமை அளிப்பதாக கவுன்சிலர்கள் புகாராக தெரிவிக்கின்றனர்.
வார்டுகளில் நிலவும் குடிநீர், சாலை போன்ற அடிப்படை பிரச்னைகளிலும் ஆளுங்கட்சி வட்ட செயலர்கள் தலையிடுவதாக எதிர்கட்சி, - சுயேட்சை கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர்.
வார்டில் வசிக்கும் பகுதி மக்களிடம், அடிப்படை பிரச்னைகளை தன்னிடம் தெரிவித்தால் விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்ட செயலர்கள் சிலர் கூறுவதால், அந்த வார்டு கவுன்சிலர் களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் சில வார்டுகளில் இந்த பிரச்னை தொடர்ந்தபடியே உள்ளது. தி.மு.க.,வின் வட்ட செயலர்களை காட்டிலும், வார்டு கவுன்சிலர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது, மாநகராட்சி மற்றும் பிற துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என, எதிர்கட்சி - சுயேட்சை கவுன்சிலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

