/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி : 100 கால் மண்டபத்தை சீரமைக்க வேண்டும்
/
புகார் பெட்டி : 100 கால் மண்டபத்தை சீரமைக்க வேண்டும்
புகார் பெட்டி : 100 கால் மண்டபத்தை சீரமைக்க வேண்டும்
புகார் பெட்டி : 100 கால் மண்டபத்தை சீரமைக்க வேண்டும்
ADDED : ஜூன் 03, 2025 12:43 AM

உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், அமிர்தகுஜலாம்பாள் சமேத வியாக்கரபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், 1,200 ஆண்டுகள் பழமையானது.
இந்த கோவிலின் முன், 100 கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் சொற்பொழிவு மற்றும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தன.
தற்போது, பல ஆண்டுகளாக மண்டபம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், மண்டபத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மண்டபத்தை சுற்றிப் பார்க்க முடியாத நிலை உள்ளது.
இரவு நேரங்களில் மண்டபத்தின் அருகே அமர்ந்து, சமூக விரோதிகள் மது அருந்தி வருகின்றனர். எனவே. 100 கால் மண்டபத்தை சீரமைத்து அதை சுற்றி கம்பி வேலி அமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தி.சே. அறிவழகன்,
திருப்புலிவனம்.