/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விடுபட்ட 4 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் அரசிடம் ரூ.50 கோடி எதிர்பார்க்கும் மாநகராட்சி

ADDED : ஏப் 18, 2025 08:12 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 1975ம் ஆண்டு, நகராட்சி நிர்வாகமாக செயல்பட்டபோது, 40 வார்டுகளுக்கு மட்டும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம், காஞ்சிபுரம் மக்களுக்கு பெரிய அளவில் வரப்பிரசாதமாக இன்றைக்கும் உள்ளது.
சிறிய நகர்ப் பகுதியாக இருந்த காஞ்சிபுரம் முழுதும் பாதாள சாக்கடை திட்டம் பிரச்னை இன்றி செயல்பட்டு வந்தது. நாளடைவில், ஒவ்வொரு வார்டிலும் புதிதாக குடியிருப்புகள் தோன்றின.
புதிய மனைப்பிரிவுகளும் உருவானதால், ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டன. இதனால், புதிய குடியிருப்புகளுக்கு சில இடங்களில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஆனால், சில இடங்களில் விரிவுபடுத்தப்படாமல் போனது.
இந்நிலையில், 350 கோடி ரூபாய் செலவில், காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைந்த செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை போன்ற பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
புதிதாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் இந்த சூழலிலேயே, விடுபட்ட பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முயல்கிறது.
அதாவது, 25, 26, 28 மற்றும் 51 ஆகிய நான்கு வார்டுகளில் உள்ள சில இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த, 50 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது.
இந்த நிதியை அரசிடம் இருந்து மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதற்கான கருத்துருவையும், மாநகராட்சி நிர்வாகம் அனுப்பியுள்ளது.
இந்தாண்டு நிதி கிடைத்தவுடன், விடுபட்ட பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவோம் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.