/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாய்ந்து விழும் நிலையில் சுடுகாடு சுற்றுச்சுவர்
/
சாய்ந்து விழும் நிலையில் சுடுகாடு சுற்றுச்சுவர்
ADDED : டிச 16, 2025 06:08 AM

காஞ்சிபுரம்: மேல்பொடவூரில், சுடுகாடு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுத்தும் முன், அவற்றை சீரமைக்க வேண்டுனெ, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த, மேல்பொடவூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு, 2022- - 23ம் நிதி ஆண்டில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இந்த சுடுகாடு சுற்றுச்சுவரையொட்டி தண்ணீர் தேங்குவதால், சுற்றுச்சுவர் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.
அந்த சுடுகாடு அருகே ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் போது, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சுற்றுச்சுவர் விழுந்து விபத்து ஏற்படும் முன், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

