ADDED : டிச 05, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர், உத்திரமேரூர் தாலுகா, ஆர்.என்.கண்டிகை கிராமத்தில், புனித அமல அன்னை சர்ச்சில் 14-ம் ஆண்டு பங்குத் திருவிழா இன்று துவங்குகிறது.
மாலை 6:00 மணிக்கு திருக்கொடி பவனி வந்து, கொடியேற்றி சிறப்பு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து, நாளை மாலை 6:00 மணிக்கு நற்கருணை ஆராதனை, ஆசீர்வாதம் வழங்குதல், சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.
நாளை மறுதினம் ஆண்டு விழா திருப்பலி, புனித அமல அன்னை தேரில் பவனி வருதல் நடக்கிறது. இந்த தேர் பவனி பெருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.