sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரசு கண்ணில் விரல்விட்டு ஆட்டும் தனியார் அமைப்பு...அராஜகம்: 7 ஏக்கர் இடத்தை மீட்பதில் நான்கு ஆண்டுகளாக இழுபறி

/

அரசு கண்ணில் விரல்விட்டு ஆட்டும் தனியார் அமைப்பு...அராஜகம்: 7 ஏக்கர் இடத்தை மீட்பதில் நான்கு ஆண்டுகளாக இழுபறி

அரசு கண்ணில் விரல்விட்டு ஆட்டும் தனியார் அமைப்பு...அராஜகம்: 7 ஏக்கர் இடத்தை மீட்பதில் நான்கு ஆண்டுகளாக இழுபறி

அரசு கண்ணில் விரல்விட்டு ஆட்டும் தனியார் அமைப்பு...அராஜகம்: 7 ஏக்கர் இடத்தை மீட்பதில் நான்கு ஆண்டுகளாக இழுபறி


UPDATED : ஜூலை 30, 2025 10:55 PM

ADDED : ஜூலை 30, 2025 10:53 PM

Google News

UPDATED : ஜூலை 30, 2025 10:55 PM ADDED : ஜூலை 30, 2025 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கென சொந்தமாக கட்டடம் கட்ட ஏழு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில், தேர்வு செய்யப்பட்ட 7 ஏக்கர் நிலத்தை 'அறம்' எனும் தனியார் அமைப்பு ஆக்கிரமித்துள்ளது. அரசுக்கு சொந்தமான அந்த நிலத்தை நான்கு ஆண்டுகளாக மீட்க முடியாமல் இழுபறியாகவே இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பட்டுநுால் சத்திரம் பகுதியில், வாடகை கட்டடத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, புதிய வாகனங்களின் பதிவு, பெயர் மாற்றம், ஓட்டுநர் உரிமம், புதுப்பித்தல் உள்ளிட்ட வாகன பதிவு சார்ந்த பல்வேறு பணிகள் நடக்கின்றன.

Image 1449903


பொதுமக்களின் வாகனங்கள் மட்டுமல்லாமல், ஸ்ரீபெரும்புதுாரைச் சுற்றியுள்ள ஒரகடம், வல்லம் வடகால், பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை ஆகிய சிப்காட் வளாகத்தின் 1,000க்கும் மேற்பட்ட ஆலைகளில் வாங்கப்படும் புதிய வாகனங்களும், அன்றாடம் பதிவு செய்யப் படுகின்றன.

கோரிக்கை அந்த வகையில் ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தினமும் 200க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.

வாடகை கட்டடத்தில், இட நெருக்கடியில் அலுவலகம் இயங்குவதால், அலுவலக கோப்புகளை பராமரிக்க முடியாமலும், பொதுமக்கள் அமர இடமில்லாமலும், வாகன பதிவு செய்வதற்கு இடவசதியும் இன்றி அவதி ஏற்படுகிறது.

வாடகை கட்டடத்தில் இயங்குவதால், மாத வாடகையாக 65,000 ரூபாய் செலுத்துவதுடன், வாகனங்கள் நிறுத்தி பரிசோதனை செய்யக்கூட அங்கு இடமில்லை.

அதனால், ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரம், போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி, பரிசோதனை செய்யும் நிலை உள்ளது.

எனவே, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, அலுவலகம் சார்பில் கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்கு சொந்தமான பூதேரிபண்டை பகுதியில், அரசு நிலம் 3 ஏக்கரை ஒதுக்கி, 2021ல் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.



இடம் தேர்வு செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளாகியும், அங்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுவதற்கு தனியார் அமைப்பு முட்டுக்கட்டை போட்டு வருவதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட உள்ள இடத்தின் அருகிலேயே, 4 ஏக்கர் நிலம், தோப்பு புறம்போக்கு வகையில் உள்ளது. இந்த காலி நிலங்களில் மரம், செடி, கொடிகள் வளர்க்க, 'அறம்' எனும் தனியார் அமைப்பிற்கு ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி நிர்வாகம் தற்காலிக அனுமதி வழங்கியது.

அந்த தனியார் அமைப்பு, பேரூராட்சி வழங்கிய இடத்தில் மட்டுமின்றி, வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலங்களிலும் குறுங்காடு வளர்ப்பதாக கூறி, மரங்களை நட்டுவைத்துள்ளது.

உரிய நடவடிக்கை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, அந்த இடம் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட ஒதுக்கப்பட்ட இடம் என தெரிந்தும், அதற்கான பணிகள் துவங்கும் முன் அவசர அவசரமாக மரங்களை நட்டு வளர்த்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட 7.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

பதிவறை, கணினி அறை, வாகன ஓட்டிகள் ஓய்வறை, அலுவலக அறை ஆகிய வசதிகளுடன் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என, 9,640 சதுர அடியில் கட்டடம், 16,813 சதுர அடியில் வாகன சோதனை இடம் ஆகியவற்றை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆனால், பொதுமக்கள் பயனடையும் அரசு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் அறக்கட்டளை நிர்வாகம், கட்டுமான பணிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் மக்கள் கூறுகையில், 'தனியார் அமைப்பு, அந்த இடத்தில் கட்டடம் கட்டக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்படுகிறது. மரங்கள் வளர்க்கிறோம் என்ற பெயரில் 7 ஏக்கர் நிலத்தை மொத்தமாக ஆக்கிரமிக்க முயல்கிறது. அரசு, அதற்கு இடம் தராமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கென ஒதுக்கப்பட்ட இடத்திலேயே, கட்டடம் கட்டப்படும். இன்னும் சில நாட்களில் அடிக்கல் நாட்டப்படும். தனியார் அமைப்பு மரம் வளர்ப்பதற்கென மேய்க்கால் புறம்போக்கு இடம் ஒதுக்க ஆலோசிக்கிறோம். - வருவாய் துறை அதிகாரி


தனியார் அமைப்பு வளர்த்துள்ள மரங்கள், செடிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், செடிகள் வளர்க்க தனியார் அமைப்பிற்கு வேறு இடம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஒதுக்கப்பட்ட இடத்தில், வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுமான பணி விரைவில் துவங்கும். - ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி







      Dinamalar
      Follow us