/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செல்லியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசை
/
செல்லியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசை
ADDED : ஆக 11, 2025 12:48 AM

திருமுக்கூடல்:திருமுக்கூடல், செல்லியம்மன் கோவில் ஆடி மாத விழாவையொட்டி கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நடந்தது.
பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திருமுக்கூடலில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், இந்தாண்டிற்கான ஆடி மாத கூழ்வார்த்தல் திருவிழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 11:00 மணிக்கு, அப்பகுதி பாலாற்றுக்கு சென்று கலசத்திற்கு புனிதநீர் நிரப்பபட்டது.
அங்கு ஆற்றங்கரை மீதுள்ள எல்லையம்மனுக்கு பல்வேறு பூஜைகளை தொடர்ந்து, கலச புறப்பாடு துவங்கி, செல்லியம்மன் கோவில் வந்தடைந்தது.
அதை தொடர்ந்து மதியம் 1:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது.