/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாத்தாவுடன் வந்த பேத்தி லாரி மோதி பலி; புது வீட்டை பார்த்து வருகையில் சோகம்

ADDED : மார் 11, 2024 11:00 PM
வானகரம் : சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் யாகவாணி, 14. இவர், திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
பைக் மீது மோதல்
கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், திருவள்ளூரில் புதிதாக கட்டப்பட்டு வரும், தங்களது வீட்டின் கட்டுமான பணிகளை பார்வையிட தந்தை ஜெயபால் மற்றும் குடும்பத்தினருடன், யாகவாணி அங்கு சென்றிருந்தார்.
பின், இரவு ஜெயபால் மற்றும் அவரது மனைவி ஒரு பைக்கில் முன்னால் செல்ல, யாகவாணி அவரது தாத்தா ஆனந்தனுடன், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வானகரம் அருகே சென்றபோது சர்வீஸ் சாலையில் இருந்து, திடீரென திரும்பிய லாரி யாகவாணி மற்றும் தாத்தா ஆனந்தன் சென்ற பைக் மீது மோதியது.
உயிரிழப்பு
இதில், நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்ததில் யாகவாணி பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட யாகவாணி உயிரிழந்தார்.
இந்த விபத்தில், ஆனந்தன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி தலைமறைவான லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.