/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்விளக்கின்றி இருளில் மூழ்கிய சுகாதார நிலைய கூட்டு சாலை
/
மின்விளக்கின்றி இருளில் மூழ்கிய சுகாதார நிலைய கூட்டு சாலை
மின்விளக்கின்றி இருளில் மூழ்கிய சுகாதார நிலைய கூட்டு சாலை
மின்விளக்கின்றி இருளில் மூழ்கிய சுகாதார நிலைய கூட்டு சாலை
ADDED : ஏப் 28, 2025 01:13 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் கிராமத்தில், 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு, கோவிந்தவாடி, பரந்துார், சிட்டியம்பாக்கம் உள்ளிட்ட குறுவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு பிரசவம் மற்றும் காய்ச்சல், காயம் உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு பொது மருத்துவம் அளிக்கப்படுகின்றன.
இந்த பரந்துார் சுகாதார நிலைய கூட்டு சாலையில், போதிய மின் விளக்கு வசதி இல்லை. இதனால், சுகாதார நிலையம் வரும் மக்கள், இரவு நேரங்களில் இருளில் காத்திருக்க வேண்டி உள்ளது. மேலும், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிக்கு ஆளாக வேண்டி உள்ளது.
எனவே, பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, மின்விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, பல்வேறு கிராமத்தினர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.