/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாதந்தோறும் டெங்கு காய்ச்சலால் காஞ்சிபுரத்தில் 50- --- 60 பேர் பாதிப்பு அதிக பாதிப்பு இல்லை என்கிறது சுகாதாரத்துறை
/
மாதந்தோறும் டெங்கு காய்ச்சலால் காஞ்சிபுரத்தில் 50- --- 60 பேர் பாதிப்பு அதிக பாதிப்பு இல்லை என்கிறது சுகாதாரத்துறை
மாதந்தோறும் டெங்கு காய்ச்சலால் காஞ்சிபுரத்தில் 50- --- 60 பேர் பாதிப்பு அதிக பாதிப்பு இல்லை என்கிறது சுகாதாரத்துறை
மாதந்தோறும் டெங்கு காய்ச்சலால் காஞ்சிபுரத்தில் 50- --- 60 பேர் பாதிப்பு அதிக பாதிப்பு இல்லை என்கிறது சுகாதாரத்துறை
ADDED : அக் 24, 2025 12:03 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு, மாதந்தோறும் 50 - -60 பேர் பாதிப்பதாக, சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. ஆனால், அதிக பாதிப்பு இல்லையென சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.
தமிழகம் முழுதும் டெங்கு காய்ச்சல் காரணமாக, நடப்பாண்டு மட்டும், 16,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், இம்மாதம் தெரிவித்திருந்தார்.
டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஸ் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த முடியாமல், உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
இருப்பினும், காஞ்சி புரம் மாவட்டத்தில், குறைவான நபர்களே டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. அதாவது, மாவட்ட அளவில் பரவலாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டாலும், மாதந்தோறும் சராசரியாக 50- - 60 பேர் மட்டுமே டெங்குவால் பாதிப்பதாக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 350 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், வீடு, வீடாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேசமயம், காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், தட்பவெப்ப நிலை காரணமாக, காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் மக்களிடையே நிலவுகிறது.
இதற்காக,ஒரு ஒன்றியத்திற்கு மூன்று முகாம் வீதம், 5 ஒன்றியங்களிலும் 15 மருத்துவ முகாம்கள் அன்றாடம் நடப்பதாகவும், காஞ்சிபுரம் நகரில் 5 முகாம்கள் என, மொத்தம் 20 முகாம்கள் அன்றாடம் நடப்பதாக சுகாதாரத் துறையின் மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் முகாம் பற்றி மருத்துவ அலுவலர் செந்தில் கூறியதாவது:
டெங்கு காய்ச்சல் அதிகளவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இல்லை. பரவலாக சிலருக்கு இருக்கிறது. மாதந்தோறும் 50- - 60 என்ற எண்ணிக்கையில் மட்டுமே பாசிட்டிவாக உள்ளது.
மற்றபடி சாதாரண காய்ச்சல் காரணமாக நாங்கள் கிராமப்புறங்களில் முகாம் அமைக்கிறோம். நடமாடும் மருத்துவ குழுக்கள் வாயிலாக, தினமும் 15 முகாம்கள் கிராமங்களில் அமைக்கிறோம்.
தேவைப்பட்டால், 20 முகாம்களும் அமைக்கப்படும். கொசு அதிகம் இருந்தால், கொசு மருந்து அடிக்கிறோம். ஊராட்சிகளில் குளோரினேஷன் செய்த குடிநீரை வினியோகம் செய்ய சொல்கிறோம்.
இதுபோன்ற தடுப்பு நடவடிக்கை காரணமாக பெரிய நோய் தொற்று ஏதும் இல்லை.

