/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்
/
பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்
ADDED : செப் 28, 2024 04:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், வயலுார் கிராமத்தில் 170 நரிக்குறவர் குடும்பத்தினர் உள்ளனர்.
இப்பகுதியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களாக பணி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று, அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.