/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூதாட்டியின் காலை உடைத்த பணிப்பெண் சிக்கினார்
/
மூதாட்டியின் காலை உடைத்த பணிப்பெண் சிக்கினார்
ADDED : ஜன 30, 2024 04:28 AM
சென்னை : முகப்பேர் மேற்கு, கங்கையம்மன் நகரைச் சேர்ந்தவர் ராசாத்தி, 85. இவர், அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். இவரை கவனித்துக் கொள்ள, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரைச் சேர்ந்த மரியா, 60, என்ற பெண், ஒரு மாதத்திற்கு முன் பணியமர்த்தப்பட்டார்.
இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், நேற்று முன்தினம் மாலை ராசாத்தியின் காலில் எண்ணெய் போடும்போது, ராசாத்தி மரியாவை திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மரியா, ராசாத்தியின் காலை உடைத்தார். இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மரியாவை கைது செய்து நொளம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.