sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நுாலகங்களுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை...சரிகிறது: உட்கட்டமைப்பு, உரிய வசதி ஏற்படுத்த வேண்டுகோள்

/

நுாலகங்களுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை...சரிகிறது: உட்கட்டமைப்பு, உரிய வசதி ஏற்படுத்த வேண்டுகோள்

நுாலகங்களுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை...சரிகிறது: உட்கட்டமைப்பு, உரிய வசதி ஏற்படுத்த வேண்டுகோள்

நுாலகங்களுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை...சரிகிறது: உட்கட்டமைப்பு, உரிய வசதி ஏற்படுத்த வேண்டுகோள்


ADDED : மே 05, 2025 12:36 AM

Google News

ADDED : மே 05, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: நுாலகங்களில் உட்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், ஆயிரக்கணக்கான வாசகர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. அதனால், வாசகர்களை நுாலகங்களுக்கு வரவழைக்கவும், போதிய அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், நுாலகத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருப்போரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், கற்றல் திறனை அதிகப்படுத்தவும், நுாலகங்களே முதல்வழி.

இங்கு தினசரி நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் படிக்கவும், நாவல், சிறுகதை, கவிதை உள்ளிட்டவற்றை வாசிக்கவும் பலரும் வருகின்றனர். தவிர, அரசு போட்டிக்கு தயாராகும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரும் தினமும் வருகின்றனர்.

177 நுாலகங்கள்


காஞ்சி - செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 177 நுாலகங்களுக்கு, வாசகர் வருகின்றனர். இவர்களுக்காக, மாவட்ட நுாலக துறை சார்பில், மத்திய மாவட்ட நுாலகம், கிளை நுாலகம், கிராம நுாலகம் ஆகியவை இயக்கப்படுகின்றன.

இதில், 64 நுாலகங்கள்அரசு கட்டடங்களிலும், நான்கு நுாலகங்கள் வாடகை கட்டடங்களிலும், 109 வாடகை இல்லாத கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன.

ஒரு மத்திய மாவட்ட நுாலகத்தில் 1,82,744 புத்தகங்களும், 73 கிளை நுாலகங்களில் 26,36,569 புத்தகங்களும், 59 கிராம நூலகங்களில் 8,10,473 புத்தகங்களும், 44 பகுதி நேர நூலகங்களில் 27,285 புத்தகங்களும் இருப்பு உள்ளன.

மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நுாலகங்களில் வாசகர்கள் அமர்ந்து படிக்க போதிய இடவசதி இருப்பதில்லை.

வாசகர்கள் புகார்


காற்றோட்டமான அறை இல்லாமல், மின் விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், வாசகர்கள் சிரமப்படுகின்றனர். இதனால், நுாலகங்களுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தவிர, பழைய கட்டடங்களில் செயல்படுவதால், மழை காலத்தில் தண்ணீர் கசிந்து புத்தகங்கள் பாழாகின்றன. மேலும், புத்தகங்கள் வைக்க போதிய இடமில்லாததால், புதிதாக புத்தகங்ககளை வாங்குவதில்லை என, வாசகர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில், நுாலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள், அரசு போட்டி தேர்வுக்கான புதிய புத்தகங்கள் குறைவாக உள்ளதாலே, வாசகர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து வருவது தெரியவந்துள்ளது.

மொத்த நுாலகங்களையும் சேர்த்து, 2021 - 22ம் ஆண்டில் 17,45,088 வாசகர்கள் வந்துள்ளனர். கடந்த 2022 - 23ம் ஆண்டில் 16,72,544 பேரும், 2023 - 24ம் ஆண்டில் 16,00,000 பேரும் வருகை புரிந்துள்ளதாக, வாசகர்களின் குறிப்பேடு வாயிலாக அறிய முடிகிறது.

வாசகர்கள் கூறியதாவது:

பல்வேறு நுாலகங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் படிப்பதற்கு தனி படிப்பகம் இல்லை.

தேசிய தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் இறந்த நாளை முன்னிட்டு, மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை நடத்தப்படாமல் உள்ளன.

இதுபோன்ற போட்டிகளால் தான் முன்பு வாசிப்பு பழக்கம் மாணவர்கள் இடையே அதிகரித்தது. அறிவியல் சார்ந்த புத்தகங்கள், நுாலகங்களில் குறைவாகவே உள்ளன.

போட்டி தேர்வுக்கான புதிய புத்தகங்கள், வரலாற்றையும், அறிவியலையும் மாணவ - மாணவியரை எளிதாக புரியவைக்கும் வகையில், படக்கதைகளுடன் கூடிய புத்தகங்களை அதிகம் வாங்க வேண்டும்.

மாணவர்கள் இடையே அவ்வப்போது போட்டி நடத்தி பரிசு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கை நுாலக துறை மேற்கொண்டால், வாசகர்களின் வருகை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நுாலகர்கள் கூறியதாவது:

நுாலகத்திற்கான சொந்த கட்டடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முடிகிறது. வாடகை கட்டடங்களில் செயல்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது.

நுாலகத்திற்கு புதிதாக ஒரு வசதியை கொண்டு வந்த பின், திடீரென நுாலகத்தை காலி செய்ய சொன்னால், வேறு இடத்திற்கு அந்த வசதியை ஏற்படுத்த இயலாத சூழல் நிலவுகிறது.

பரிந்துரை


முன்பு, இல்லத்தரசிகள், அதிகளவில் நுாலகத்திற்கு வந்து, புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிப்பர். தற்போது அது குறைந்துள்ளது. மாணவர்களும் வாசிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை.

அனைத்து நுாலகங்களுக்கும் வாசகர்களின் வருகையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் மனநிலையை அறிந்து, அவர்கள் விரும்பும் புத்தகத்தை பரிந்துரைத்து வருகிறோம்.

மாணவர்களையும், நுாலகத்திற்கு வரவழைக்க அவ்வப்போது, பேச்சு, எழுத்து, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு தான் வருகிறது.

பள்ளிகளுக்கு நேரடியாக சென்று, மாணவர்களை நுாலகத்தில் உறுப்பினராகவும் சேர்த்து வருகிறோம். அவர்களுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டில் வாசகர் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us