/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடம் மேம்பால சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால் அவதி
/
ஒரகடம் மேம்பால சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால் அவதி
ஒரகடம் மேம்பால சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால் அவதி
ஒரகடம் மேம்பால சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால் அவதி
ADDED : நவ 03, 2025 01:31 AM

ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் மேம்பாலதின் கீழ், சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், வாகன நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
வண்டலுார் -- வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரகடம் உள்ளது. இப்பகுதியைச் சுற்றி, 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. பல லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
பிரதான தொழிற்சாலை பகுதியாக உள்ள ஓரகடம் சந்திப்பில், வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலை, மேம்பாலம் கீழே, ஸ்ரீபெரும்புதுார் - -சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை செல்கிறது.
இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு வரும் கன்டெய்னர் வாகனங்கள், ஒரகடம் மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் சாலையோரங்களில் நிறுத்தப்படுகிறது.
இதனால், மேம்பாலத்தின் கீழ் செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால், மற்ற வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும், 'பீக் ஹவர்' மற்றும் இரவு நேரங்களில், இவ்வழியாக வரும் வாகனங்கள், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள கன்டெய்னர் லாரிகளில் மோதி, அவ்வப்போது விபத்துக்குள்ளாகி வருகின்றன.
எனவே, மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையோரம் நிறுத்தப்படும் கன்டெய்னர் லாரிகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுதுள்ளனர்.

