ADDED : நவ 12, 2024 10:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி சார்பாக, ராஜிவ்காந்தி நகர் பகுதியினருக்கு, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை வழியாக செல்லும் குடிநீர் குழாய், ராஜிவ்காந்தி நகர் அருகே, நெடுஞ்சாலையோரம் உடைந்து, ஆறு மாதங்களுக்கு மேலாக குடிநீர் வெளியேறி வருகிறது.
இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
இருமுறை குடிநீர் வெளியேறும் பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு உடைப்பு சரி செய்யும் பணி நடந்தது. இருப்பினும், தொடர்ந்து குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.
எனவே, சாலை நடுவே செல்லும், குழாயை முழுமையாக தோண்டி உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.