/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தக்காளி விலை கடும் வீழ்ச்சி 5 கிலோ ரூ.100க்கு விற்பனை
/
தக்காளி விலை கடும் வீழ்ச்சி 5 கிலோ ரூ.100க்கு விற்பனை
தக்காளி விலை கடும் வீழ்ச்சி 5 கிலோ ரூ.100க்கு விற்பனை
தக்காளி விலை கடும் வீழ்ச்சி 5 கிலோ ரூ.100க்கு விற்பனை
ADDED : டிச 17, 2024 10:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:ஆந்திர மாநிலத்தில் பலமநேரி, புங்கனுார், மதனபள்ளி உள்ளிட்ட வட்டாரங்களில் விளையும் தக்காளி, காஞ்சிபுரம் சந்தைகளுக்கு அதிகளவு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
கடந்த வாரம் மழையின்போது, காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து, சில நாட்களாக வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால், காஞ்சிபுரத்தில் நடமாடும் வாகனங்களில், 5 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை சரிந்துள்ளதால், மகிழ்ச்சி அடைந்த இல்லத்தரசிகள், கிலோ கணக்கில் தக்காளி வாங்கிச் செல்கின்றனர்.