/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாய் தூர்ந்து கிடக்கும் அவலம்
/
மழைநீர் வடிகால்வாய் தூர்ந்து கிடக்கும் அவலம்
ADDED : ஏப் 27, 2025 01:32 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, வண்ணாரத் தெருவில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க, 20 ஆண்டுக்கு முன் இருபுறமும் வடிகால்வாய் அமைக்கப்பட்டது. தற்போது, மழைநீர் வடிகால்வாய் முறையாக பராமரிப்பு இல்லாமலும், மண்ணாலும் குப்பையாலும் தூர்ந்த நிலையில் உள்ளது.
மேலும், வடிகால்வாய் பல இடங்களில் உடைக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால், மழைக்காலத்தில் தெருக்களில் தேங்கும் மழைநீர், வெளியேற முடியாத சூழல் உள்ளது.
அவ்வாறு தேங்கும் மழைநீரில், தொற்றுநோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தூர்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.