/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிகழ்ச்சி முடிந்தும் பதாகை அகற்றுவதில் காஞ்சியில் ஆளும் கட்சியினர் அலட்சியம்

ADDED : அக் 07, 2024 12:39 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி வளாகத்தில், தி.மு.க., பவள விழா மற்றும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் கடந்த மாதம் இறுதியில் நடந்தது.
முதல்வர் ஸ்டாலினை வரவேற்கும் விதமாக ஆங்காங்கே விளம்பர பதாகைகள் மற்றும் நகர சாலை ஓரத்தில், தற்காலிக தடுப்புகள் ஏற்படுத்தி ராட்சத சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு இருந்தன.
விழா முடிந்து ஒரு வாரமாகியும், ராட்சத பதாகைகள் மற்றும் தற்காலிக சுவர் விளம்பரங்கள் அகற்றவில்லை. இதனால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்லும் வாகன ஓட்டிகள் திசை திருப்புவது மற்றும் காஞ்சிபுரம் காமராஜர் வீதி உணவகங்கள் மற்றும் சிறு வணிக கடைகள் நடத்த முடியவில்லை என, புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் விளம்பர பதாகை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.