/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சர்வீஸ் சாலையில் மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்தது
/
சர்வீஸ் சாலையில் மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்தது
சர்வீஸ் சாலையில் மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்தது
சர்வீஸ் சாலையில் மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்தது
ADDED : மார் 05, 2024 04:09 AM

குன்றத்துார் : தாம்பரம் - --மதுரவாயல் பை-பாஸ் நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையை பயன்படுத்தி, ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், இந்த சர்வீஸ் சாலையில் பரணிபுத்துார் முதல் கோவூர் வரை, மின் விளக்குகள் இரவில் ஒளிர்வதில்லை. இதனால், சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இந்த வழியே, இரவு நேரத்தில் பணியை முடித்து பெண்கள், ஆண்கள் அதிக அளவில் செல்கின்றனர். இருள் சூழ்ந்து காணப்படுவதால் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே, இந்த சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்' என்றனர்.