/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழா துவக்கம்
/
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழா துவக்கம்
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழா துவக்கம்
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழா துவக்கம்
ADDED : நவ 24, 2025 02:31 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத கடை ஞாயிறு விழா நேற்று துவங்கியது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், பக்தர்கள் மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் கடை ஞாயிறு விழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, முதல் வார கார்த்திகை கடை ஞாயிறு விழா துவங்கியது.
இதில், சிறுவர்கள், பெரியவர்கள் என, திரளான பக்தர்கள் மண்சட்டியில், பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து, அதில் அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி, தலையில் மாவிளக்கு சுமந்தபடி கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் திவ்யா, கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.