ADDED : ஏப் 28, 2025 01:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:-குன்றத்துாரில், நவகிரகங்களில் ராகு தலமாக விளங்கும் பழமை வாய்ந்த திருநாகஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் எதிரே சூர்யபுஷ்கரணி குளம் உள்ளது.
இந்த குளத்திற்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் துார்ந்து உள்ளதால், மழைக்காலத்தில் குளத்திற்கு நீர் செல்வதில்லை.
தற்போது, கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குளத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இன்றி வறண்டு காணப்படுகிறது.
இந்த கோவிலில், மே 2ம் தேதி பிரம்மோத்சவ விழா துவங்க உள்ளது. குளத்தில் தண்ணீர் இல்லாததால், பக்தர்கள் நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குளத்தை சுற்றிய பகுதிகளில் இருந்து, மழை நீரை குளத்திற்கு வர வழி வகை செய்து, தேங்கி வைக்கும் வகையில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.