/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போதையில் குளத்தில் விழுந்தவர் பலி
/
போதையில் குளத்தில் விழுந்தவர் பலி
ADDED : பிப் 25, 2024 02:24 AM
ஸ்ரீபெரும்புதுார், விழுப்புரம் மாவட்டம், கொத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார், 40, தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, மனைவி கீதா, 35 மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.
இவர், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மேவலுார்குப்பம் பகுதியில் குடும்பத்துடன் வாடகைக்கு தங்கி, கீவலுாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, மேவலுார்குப்பம் அருகில் உள்ள குளக்கரையில் அமர்ந்து மது அருந்தினார். பின் போதையில் எதிர்பாராத விதமாக குளத்தில் விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.