/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இடிந்து விழும் நிலையில் குளத்தின் சுற்றுச்சுவர்
/
இடிந்து விழும் நிலையில் குளத்தின் சுற்றுச்சுவர்
ADDED : ஆக 06, 2025 02:11 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளத்தின் சுற்றுச்சுவர் ஒரு பகுதி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் - அரக்கோணம் செல்லும் சாலையில் சர்வதீர்த்த குளம் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்குளம், ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2011ல், 45 லட்சம் ரூபாய் செலவில் குளம் துார்வாரப்பட்டு, சுற்றிலும் நடைபாதை, சுற்றுச்சுவருடன் கம்பி வேலி அமைக்கப்பட்டது.
இந்நிலையில், குளத்தின் வடகிழக்கு பகுதியில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள சர்வதீர்த்த குளத்தில் சேதமடைந்த சுற்றுச்சு வரை சீரமைக்க, அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

