/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி பாலதர்மசாஸ்தா கோவிலில் திருக்கல்யாண உத்சவம் நாளை துவக்கம்
/
காஞ்சி பாலதர்மசாஸ்தா கோவிலில் திருக்கல்யாண உத்சவம் நாளை துவக்கம்
காஞ்சி பாலதர்மசாஸ்தா கோவிலில் திருக்கல்யாண உத்சவம் நாளை துவக்கம்
காஞ்சி பாலதர்மசாஸ்தா கோவிலில் திருக்கல்யாண உத்சவம் நாளை துவக்கம்
ADDED : நவ 06, 2025 01:51 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா கோவிலில் 8ம் ஆண்டு பிரதிஷ்டை தினம், கலசாபிஷேகம், திருக்கல்யாண உத்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள பாலதர்ம சாஸ்தா கோவிலில் 8ம் ஆண்டு பிரதிஷ்டை தினம், திருக்கல்யாண உத்சவம் நாளை காலை 8:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
மாலை 5:00 மணிக்கு சித்தி, புத்தி சமேத கற்பக விநாயகர் திருக்கல்யாண வைபவமும், தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.
வரும் 8ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண உத்சவமும், தொடர்ந்து வீதியுலாவும், வரும் 9ம் தேதி காலை 9:30 மணிக்கு புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு மஹா கும்பாபிஷேகமும் நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு திருக்கல்யாண உத்சவமும் தொடர்ந்து சுவாமி வீதியுலாவும், 10ம் தேதி மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வருருக்கு திருக்கல்யாண உத்சவமும் தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.
விழா நிறைவாக வரும் 11ம் தேதி காலை 10:00 மணிக்கு பாலதர்மசாஸ்தாவிற்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் பிரதிஷ்டை தினம், புத்திர மூலமந்திர ஹோமம், 1,008 சஹஸ்ரநாமம், கலச புறப்பாடும் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு பாலதர்ம சாஸ்தா வீதியுலா நடைபெறுகிறது.

